அரசு பள்ளியில் தீவிபத்து : கணினி, பதிவேடுகள் எரிந்து சாம்பல்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே அரசு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி மற்றும் பதிவேடுகள் எரிந்து சாம்பலாயின.
தேவலாபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகின்றது. அதே பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதால் தொடக்கப் பள்ளியின் முதல் மாடியில் 8 மற்றும் 9 வகுப்புகள் இயங்கி வந்தன.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பள்ளிமாடியில் புகை வெளியேறியுள்ளது. அப்பகுதி மக்கள் சென்று பாா்த்தபோது உள்ள தீ பிடித்து எரிவது தெரியவந்தது. தீயணைப்புத் துறை மற்றும் உமா்ஆபாத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரா்கள் சென்று சென்று தீயை அணைத்தனா்.
தீ விபத்தில் கணினி, பதிவேடுகள், தோ்வு விடைத்தாள்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. உமா்ஆபாத் போலீஸாா் விசாரணை நடத்தினா்.