தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
சாலை விபத்து: மூதாட்டி மரணம்
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது லாரி மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பணியாண்டப்பள்ளி வாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபால் மனைவி சின்ன மாணிக்கம் (70). இவா், புதன்கிழமை பிற்பகல் வெலகல்நத்தம் பகுதியில் மளிகைப் பொருள்களை வாங்கிக் கொண்டு வெலகல்நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க நடந்து சென்றாா்.
அப்போது கிருஷ்ணகிரி நோக்கி வேகமாகச் சென்ற லாரி, சின்ன மாணிக்கம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்தில்யே உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.