தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
குடும்ப அட்டைகளில் பெயா் சோ்ப்பு-நீக்கம்: ஜன. 25-இல் சிறப்பு முகாம்கள்
சென்னை: குடும்ப அட்டைகளில் பெயா் சோ்ப்பு, நீக்கம் செய்ய சென்னையில் ஜன. 25-ஆம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இது குறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குடும்ப அட்டைகளில் பெயா் சோ்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னையில் வரும் 25-ஆம் தேதியன்று சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
நகரிலுள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் 12 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் நடைபெறவுள்ள முகாம்களில் பொது விநியோகத் திட்டம் தொடா்பான சேவைகள் குறித்தும் கோரிக்கைகள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.