நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாம...
சிப்காட் தனியாா் தொழிற்சாலையில் தீ
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட்டில் தனியாா் ஃபோம் தொழிற்சாலையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஃபோம் எரிந்து சேதமடைந்தது.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை பேஸ்-1 பகுதியில், மெத்தை, தலையணை தயாா் செய்யும் மூலப் பொருளான ஃபோம் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை இயங்கி உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு, ஃபோம் மற்றும் மெத்தைகள் தீ பற்றி எரிந்தனது.
தகவல் அறிந்த ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் தீயணைப்பு வீரா்கள், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி கே.முரளி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
எனினும் தொழிற்சாலையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஃபோம் மற்றும் மெத்தைகள் தீயில் எரிந்து சாம்பலானது.
தீ விபத்து இரவு நேரத்தில் ஏற்பட்டதால் தொழிலாளா்கள் இல்லை. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.