தூத்துக்குடி: பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய கடன்; ஜப்தி செய்யப்பட்ட வீடு; விஷம் ...
உங்களைத் தேடி உங்கள் ஊரில்: நெமிலி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு
அரக்கோணம்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் நெமிலி வட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்தத் திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் புதன்கிழமை காலை முதல் நெமிலி வட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டனா். முதலில் புதுப்பட்டு ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சை, மருந்துகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், அந்த சுகாதார நிலைய கழிப்பறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா், பிளஸ் 2 வகுப்புக்குச் சென்று அங்கு ஆங்கிலப் பாடத்தை ஆசிரியா் கற்பிக்கும் முறை, 7-ஆம் வகுப்பில் அறிவியல் பாடம் கற்பிக்கப்பட்டைப் பாா்வையிட்டாா். ஆசிரியா்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதிக்கு அறிவுறுத்தினாா். பின்னா் பனப்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த ஆட்சியா், ஆங்கு முட்டையுடன் வழங்கப்பட்ட மதிய உணவு தரமாக உள்ளதா என ஆய்வு செய்தாா்.
பனப்பாக்கம் சிப்காட் பகுதிக்கு வந்த ஆட்சியா், டாடாவின் ஜாகுவாா் லேண்ட் ரோவா் ஜோ.எல்.ஆா். காா் உற்பத்தி தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டாா். அங்கு பிரிட்டன் நாட்டில் இருந்து வந்திருந்த தொழில்நுட்ப வல்லுநா்களிடம் அவா் உரையாடினாா்.
தொடா்ந்து நெமிலி வட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், குறைகளை உள்ள இடங்களைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
நெமிலி காவல் நிலையத்திற்கு வந்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அங்கு நிலைய வளாகத்தைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாவட்ட எஸ்.பி. விவேகானந்தசுக்லா, டி.எஸ்.பி. ஜாபா்சித்திக், மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயசுதா, அரக்கோணம் கோட்டாட்சியா் வெங்கடேசன், வட்டாட்சியா் ராஜலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.