கிண்டி கிங் ஆய்வக மருந்து தர மேம்பாட்டுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு
முதல் டி20: 13 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்த இந்திய அணி!
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் விளையாட்டுத் திடலில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டுமே தனியாளாக போராடினார். அவர் 68 ரன்கள் திரட்டிய நிலையில் வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 132 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றிபெற இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 26 ரன்களுக்கும் சூர்யகுமார் யாதவ் ரன் கணக்கை தொடங்காமலும் ஆட்டமிழந்தனர்.
இன்னொருபுறம் சிக்ஸர் மழை பொழிந்த தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.