சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா
பிபிஎல்: நாக்-அவுட் சுற்றில் வார்னர் அணி வெற்றி, ஸ்டாய்னிஸ் அணி வெளியேற்றம்!
பிபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்றில் இருந்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெளியேறியது.
பிபிஎல் டி20 லீக் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியுற்று, கடைசி 5 போட்டிகளில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
குவாலிஃபையர் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் சிட்னி சிக்ஸர்ஸை வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
இந்த நிலையில் நாக் அவுட் சுற்றில் மெல்போஎன் ஸ்டார்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டர்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 135/7 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஆலிவர் டேவிஸ் 36, மேத்திவ் கில்லிக்ஸ் 28, சாம் பில்லிங்ஸ் 24 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 28 ரன்கள் எடுத்து அசத்தினார். ஸ்டாய்னிஸ் சரியாக விளையாடமல் ஒருபுறம் அழுத்தத்தை ஏற்படுத்தி ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்ததும் மேக்ஸ்வெல்லும் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
பின்னர் இறுதியில் ஹில்டன் 15 ரன்களும் மார்க் ஸ்டீகெட்டே 18 ரன்களும் எடுத்தார்கள்.
சிட்னி தண்டர்ஸ் சார்பில் நாதன் மெக் ஆண்ட்ரூ 5 விக்கெட்டுகளும் டாம் ஆண்ட்ரூஸ், தன்வீர் சங்கா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
அடுத்ததாக சேலஞ்சர் சுற்றில் சிட்னி தண்டர்ஸ் அணியும் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் ஜன.24ஆம் தேதி மோதுகிறது. இதில் வெல்லும் அணி ஜன.27ஆம் தேதி இறுதிப் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் உடன் மோதுகிறது.