I won't miss any of Soubin and Suraj Venjaramoodu's movies! - Gautam Vasudev Men...
பாகிஸ்தான் பெயரை கட்டாயம் ஜெர்சியில் பொறிக்க வேண்டும்: ஐசிசி
பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சிதான் அனைத்து அணிகளும் அணிய வேண்டும் என்று ஐசிசி நிர்வாகி தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.
பாதுகாப்பு காரணத்துக்காக பாகிஸ்தான் பயணிக்க இந்திய அணி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்திய அணி வீரர்கள் அணியும் ஜெர்சி, விளையாட்டு ’கிட்’களில் ஹோஸ்ட் நாடுக்கான இடத்தில் பாகிஸ்தான் பெயரை பொறிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மறுப்பு தெரிவித்ததாகவும், துபையில் இந்திய அணிக்கான போட்டிகள் நடைபெறுவதால் பாகிஸ்தான் பெயரை அச்சிட விலக்கு கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த ஐசிசி நிர்வாகி ஒருவர், இந்திய அணி துபையில் விளையாடினாலும், ஹோஸ்ட் நாடான பாகிஸ்தான் பெயரை தொடருக்கான இலட்சினையுடன் வீரர்களின் ஜெர்சி, கிட்களில் கட்டாயம் பொறிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க : சாம்பியன்ஸ் டிராபி: கேப்டன்கள் போட்டோஷுட்டை புறக்கணிக்கும் ரோஹித்?
இதனிடையே போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறும் அணிகளின் கேப்டன்கள் சந்திப்பு, போட்டோஷுட்டில் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்று உறுதிப்படுத்தாமல் உள்ளது.