சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா
புதுச்சேரி ஜோடி: ஆகாயத்தில் `லவ்' ப்ரொபோசல்… கடலுக்கு அடியில் திருமணம்! - நெகிழும் மணமக்கள்
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜான் பிரிட்டோ - தீபிகா. இவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது, இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. அதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தீபிகாவை சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு அழைத்து சென்ற ஜான் பிரிட்டோ, பாரா கிளைடரில் பறந்து வந்து `Will u marry me?’ என்ற வாசகங்களுடன் லவ் ப்ரொபோசல் செய்தார்.
திவ்யா அதை ஏற்றுக் கொண்ட நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இருவருமே ஆழ்கடல் பயிற்சியாளர்கள் என்பதால் கடலுக்கு, அடியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜான் பிரிட்டோவிடம் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார் தீபிகா.
அதற்கு அவரும் சம்மதிக்க, ஆழ்கடல் பயிற்சியாளர்களின் துணையுடன் இன்று இருவருக்கும் கடலுக்கு அடியில் திருமணம் நடைபெற்றது. புதுச்சேரியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கடல் பகுதியை தேர்வு செய்தனர். கடலுக்கு அடியில் 50 அடி ஆழத்திற்கு திருமண ஆடையுடன் மணமக்கள், மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்துப் பேசிய மணமக்கள், ``காற்று மாசுபாடு, கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் கடல் மாசுபாட்டை தடுப்பது குறித்த விழிப்புணர்வுக்காகவே, ஆழ்கடல் பயிற்சியாளரான நாங்கள் கடலுக்கு அடியில் திருமணம் செய்து கொண்டோம்” என்று நெகிழ்கின்றனர்.