செய்திகள் :

எல்லா கடை கடிகாரத்திலும் 10:10 என நேரம் காட்டுவது ஏன்? | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

பொழுதெல்லாம் ஓடினாலும் அதே இடத்திலேயேதான் ஓடுவான் அவன் யார்?

ஓடாமல் நின்று போனாலும் நாளுக்கு இரு முறை சரியான நேரம் காட்டும் அது என்ன?

பதிலை யோசிங்க... ஈஸியாக இருக்குமே "கடிகாரம் " எனும் பதில்.

சரி பொதுவாக உலகமெங்கும் கடிகார விளம்பரம் என்றாலே அனைத்து கடிகாரங்களும் 10.10 என நேரம் காட்டுவதாகவே மணி முள்ளும் நிமிட முள்ளும் இருக்கும்.

அது என்ன உலகம் முழுவதும் 10.10 என நேரம் காட்டுவதாகவே விளம்பர கடிகாரங்கள்.

10.10 என்பது கடிகாரத்தை கண்டு பிடித்தவர் மறைந்த நேரமா?!

அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப் பட்ட நேரமா? அவர் இறந்த போது, கடிகாரம் அப்படியே உறைந்து போய் நின்ற நிமிடம் 10.10.? இல்லை.. அமெரிக்கா அதிபர் ஜான்எஃப் கென்னடி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நேரமா? இப்படியாக இதுவரை நீங்கள் அறிந்த வரலாறு எது?!

இது இல்லாமல் நீங்கள் அறிந்து அறிந்த புதிய தகவல்கள் ஏதும் உள்ளதா?

சித்தரிப்புப் படம்

சரி, அடுத்த கேள்வி..  பொதுவாக ஆண்கள் என்றாலே கடிகாரத்தை தங்களின் இடது கையில் கட்டுகிறார்கள். பெண்கள் என்றாலே கடிகாரத்தை வலது கையில் கட்டுகிறார்கள். அது ஏன்? 

சரி வாருங்கள் சுவையான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம். மாற்றுச் சிந்தனைகள் இருந்தால் கூறுங்கள் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் நானும். 

சரி முதலில் 10.10 என நேரம் ஏன் என்பதை அறிவோம்.

இன்றும் கூட கிராமங்களில் நேரம் என்னவாக இருக்கும் என்றவுடன் நெற்றிக்கு மேலாக கைகளை வைத்து வானில் சூரியனைப்  பார்த்து இந்நேரம் நேரம் இதுவாக இருக்கும் என்று கூறும் சூரியக் கடிகாரம், இன்னும் சிலர் நின்ற இடத்திலேயே இருந்து தன் நிழலைப் பார்த்து நேரம் இதுவென கூறும் நிழற் கடிகாரம் அடுத்து மணற் கடிகாரம்,  சீனர்கள் கண்டு பிடித்த நீர்க் கடிகாரம் , சுவர் கடிகாரம், ரிஸ்ட் வாட்ச்,ஸ்மார்ட் வாட்ச், மொபைல் போன் வாட்ச் என கடிகாரங்கள் அவதாரங்கள் ஏராளம். 

கி.பி.510 -ம் ஆண்டு வாக்கில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பீட்டர் ஹென்லீன் எனும் ஒரு பூட்டு வியாபாரி வடிவமைத்த கடிகாரம் தான் இன்று நாம் பயன்படுத்தும் கடிகாரத்தின் அடிப்படை மாடல்.

எனவே  பூட்டு தொழிலாளியாக இருந்த பீட்டர் ஹென்லீனை "FATHER OF MODERN CLOCK" என்று அழைக்கலாம்.

இவரது கடிகார அடிப்படை MECHANISM-தான் பல வருடங்களாக கடிகாரங்கள் வடிவமைப்பில் இருந்து வந்த நிலையில் 1637 -ம் ஆண்டு வாக்கில் கலிலியோ கலிலி அவர்கள் பீட்டர் ஹென்லீன் வடிவமைத்த இயந்திரவியலை அடிப்படையாகக் கொண்டு ஒரு "PENDULAM CLOCK " வடிவமைத்தார்.

கால ஓட்டத்தில் இதோ இன்று நமது கைகளில் ஸ்மார்ட் வாட்ச் வடிவில் வந்து நிற்கிறது. இப்படியாக பலரும் பல்வேறு காலங்களில் கண்டு பிடித்த பல்வேறு கடிகாரங்கள், இவைகளை கண்டு பிடித்தவர் ஒருவரும் சரியாக 10.10 மணிக்கு மறைந்ததாக வரலாறு இல்லை.

சித்தரிப்புப் படம்

அதே போல் முன்னாள் அமெரிக்கா அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் சுடப்பட்டது சரியாக இரவு 10.15 மணிக்கு. அவர் இறந்தது காலை 07.22 மணிக்கு. அமெரிக்கா அதிபர் ஜான் எஃப் கென்னடி மீது சுடப்பட்டது 12.30 மணி, அவர் இறந்தது 01.00 மணிக்கு. 

சரி இப்போது இந்த 10.10 ஏன் எதற்கு என அறிந்து கொள்வோம் ‌. சமகால உலகில் முகநூல் துவங்கி குறுஞ்செய்தி கட்செவி என நீக்கமற நிறைந்து கிடக்கின்றன அறியவும் தெறியவும் செய்திகள், தகவல்களுக்கு ஏற்ப உடனே தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான EMOJI's. நீங்களும் கூட மகிழ்ச்சியா... உடனே புன்னகை  எமோஜிகளை அனுப்பி இருப்பீர்கள். 

சோகமா... உடனே  எமோஜிகளை அனுப்பி இருப்பீர்கள்தானே. ஆக.... கடிகாரங்கள் காட்டும் 10.10 எனும் மணி முள் நிமிட முள் பார்வைக்கு மகிழ்ச்சியான ஸ்மைலி எமோஜியை போல் உள்ளதுதானே. உங்களுடைய பார்வைக்கு படும் கடிகாரங்கள் புன்னகையை காட்டி உங்களையும் புன்னகைக்க வைக்கவே இந்த 10.10.

சரி அடுத்து ஆண்கள் அனைவரும் இடது கையில் வாட்ச், பெண்கள் பெரும்பாலும் வலது கையில் வாட்ச் கட்டுவது ஏன் எதற்கு? 

ஏதோ ஒரு பொருளை கீழே தவற விடுகிறீர்கள் உடனடியாக அதனை எடுக்க வேகமாக உங்களுடைய எந்தக் கை நீளும் வலது கையா? இடது கையா?

வேகமாகச் செல்லும் பேருந்தில் ஏறிட வேண்டும் என்று ஓடி படிக்கட்டு கம்பியைப் பற்றுகிறீர்கள் எந்தக் கையால் பிடிப்பீங்க வலது கையாலா? இடது கையாலா? அனைவரின் பதிலும் வலது கை என்றே வரும். ஆம் வேகமாக அவசரமாக நீள்வது வலது கைதானே. அப்படியாக நீளும் வலது கையில் கடிகாரம் கட்டுவது கடிகாரத்திற்கு பாதுகாப்பானதா?

சித்தரிப்புப் படம்

கடிகார கண்ணாடி சேதம் அடைந்து விடாதா? எனவேதான் ஆண்கள் தங்களின் வாட்ச் வலது கையில் கட்டாமல் இடது கையில் கட்டுகிறார்கள். ஆனால் பாருங்கள் பெண்கள் எதிலும் எப்போதும் பொறுமையாக நிதானமாக செயல்படுவார்கள். அவர்கள் வலது கையில் வாட்ச் கட்டுவதால் கடிகாரத்திற்கோ கடிகார கண்ணாடிக்கோ சேதம் ஏற்படாது. இன்னும் சில பெண்கள் வலது கையில் கட்டிய வாட்ச் கண்ணாடி கையின் வெளிப் புறமாக இல்லாமல் கையின் உட்புறமாக இருப்பதாக கட்டிக் கொள்கிறார்கள்.

கடிகார நேரம் கூட அவர்களுக்கு மட்டுமே பார்க்க முடிவதாக! 

வலது கையில் வாட்ச் கட்டிய, கட்டும் ஆண்கள் உண்டா? 

நடிகராக இருந்து அமெரிக்க ஜனாதிபதியாக ஆன ரொனால்டு ரீகன் வலது கையில் வாட்ச் கட்டும் வழக்கம் கொண்டவர்.

தமிழ்நாட்டில் நடிகராக இருந்து முதல்வர் பதவியில் அமர்ந்த எம்ஜிஆர் கூட வலது கையில் வாட்ச் கட்டும் வழக்கம் கொண்டவர். மெரீனாவில் உள்ள அவரது சமாதியில் காது வச்சு கேட்டால் வாட்ச் ஓடும் சப்தம் கேட்கும் என கேட்பவர்கள் இன்று கூட உண்டு.

எனது பள்ளிக் கூட நாள்களில்  ரிஸ்ட் வாட்ச் எனும் கைக் கடிகாரம் அபூர்வமான ஆச்சரியமான ஒன்று. தேர்வு எழுதும் நாள்களில் கூட வாத்தியார் இன்னும் இவ்வளவு நேரம்தான் இருக்கு என்று கூறக் கேட்டு தேர்வுகளை எழுதி முடித்த நான் +2 க்கு பிறகு அன்றைய பாண்டிச்சேரி இன்றைய புதுச்சேரியில் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த காலம். கல்லூரியில் படித்த போது ஸ்காலர்ஷிப் பணம் கிடைத்தது.

உடனே ஊரில் இருந்த அப்பாவுக்கு ஸ்காலர்ஷிப் பணம் கிடைத்து விட்டது என்று கூறி வரவழைத்தேன். வந்த அப்பா மகிழ்ச்சியாக பணத்தை வாங்கி கொண்டு என்னை நேராக  பாண்டிச்சேரி நேரு வீதிக்கு அழைத்துச் சென்றார்.

சித்தரிப்புப் படம்

சென்னையில் தி.நகர் ரங்கநாதன் வீதி போல பாண்டிச்சேரிக்கு நேரு வீதி. நேராக ஒரு வாட்ச் கடைக்கு அழைத்துச் சென்ற அப்பா டைட்டன் வாட்ச் ஒன்றை எடுத்து கையை காட்டுமாறு என்னிடம் கூறிட மிகவும் மகிழ்ச்சியாக நெகிழ்ச்சியாக உற்சாகமாக நான் வேகமாக எனது வலது கையை நீட்டினேன். அப்பாவும் ஏதும் கூறாமல் என் வலது கையிலேயே வாட்ச்சை கட்டி விட்டார்.

நொடிகள் நிமிடங்கள் மணிகள் என காலம் என் அப்பா மூலம் என் வலது கையில் கட்டிக் கொண்டு ஒட்டிக் கொண்ட நிமிடம் அது.

இதோ இப்போது வரை அப்பா அவர்கள் அன்புடன் வலது கையில் கட்டி விட்டுச் சென்ற வலது கையிலேயே வாட்ச் கட்டும் வழக்கம் எனக்கு தொடர்கிறது. வலது கையில் வாட்ச் கட்டிக்கொண்டு வருவாப்லயே அந்த சுரேஷ் என பணி செய்யும் இடத்தில் சக நண்பர்களிடையே எனது வலது கை வாட்ச் ஒரு அடையாளமாக மாறிப் போனது எனக்கு.. எனது கடிகாரம் இன்று வரை மிகவும் பாதுகாப்பாக உள்ளது. ஆமா உங்கள் கைக் கடிகாரம் எந்தக் கையில்...?!

- வீ.வைகை சுரேஷ்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

அந்த காய்கறிக்கடை பாட்டி டு பக்கத்து வீட்டு ராஜி அக்கா... ஒரு ஆண்டு என்னவெல்லாம் செய்யும்?

புது வருடம் தொடங்குகிறது. எல்லோருக்கும்ஏதோ கனவுகள், ஆசைகள், இலக்குகள், எதிர்பார்ப்புகள் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு வருடமும் இது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், ஒரு ஆண்டு தொடங்குவது போல வருடம் முழுவதும்... மேலும் பார்க்க

"உசுரோட இருந்தப்போ ஒரு பட்டு சேல வாங்கிக்கொடுக்காம விட்டுட்டேனே"- ஒர் ஆணின் சேலை தினப் பகிர்வு

இன்று உலக புடவைகள் தினமாம்... அம்மாவிடம் சொல்லும்போதே, `புடவையே இல்லை' என வழக்கமான புலம்பல்களை ஆரம்பித்தார். அலமாரியை திறந்தால் மஞ்சள், பச்சை, சிவப்பு, ஊதா என எல்லா வண்ணத்திலும் 20 புடவைகள் இருந்தது.'... மேலும் பார்க்க

உலகப் புகழ்பெற்ற மூக்குகள்.. வாசனை சொல்லும் நினைவுகள்..! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

என் வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களில் பாரதியின் பங்கு - நெகிழ்ச்சி பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை: பெண்களால் துன்புறுத்தப்படும் ஆண்கள் - `My Wife, My Abuser’ ஆவணப்படமும் ஆய்வுகளும்

‘My Wife, My Abuser’‘குடும்ப வன்முறை’ என்றவுடன் ஓர் உயரமான, கட்டுமஸ்தான ஆண், அவரின் பெண் துணையை துன்புறுத்துவதுதான் நம் கண் முன்னால் நிழலாடும். செய்திகளிலும் அதுவே சொல்லப்படும். சினிமாவிலும் அவையே காட... மேலும் பார்க்க