தைத் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் பிரமாண்ட கோலப்போட்டி... | Photo Album
ஆஸி. அணிக்காக 100 ஓவர்கள் வீசவும் தயார்: நாதன் லயன்
ஒவ்வொரு வாரமும் 100 ஓவர்கள் வீசவும் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி தொடங்குகிறது.
100 ஓவர்கள் வீசவும் தயார்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டால், ஒவ்வொரு வாரமும் 100 ஓவர்கள் வீசவும் தயாராக இருப்பதாக சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:கௌதம் கம்பீர் - பிசிசிஐ அதிகாரிகள் கூட்டம்: மூத்த வீரர்கள் எதிர்காலம் குறித்து ஆலோசனையா?
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எனக்கு அதிக அளவிலான ஓவர்கள் வீச வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் அணிக்காக 100 ஓவர்கள் வீச வேண்டும் என்ற தேவை இருப்பின், எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அணிக்காக 100 ஓவர்கள் வீசவும் தயாராக இருக்கிறேன் என்றார்.
அண்மையில் இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நாதன் லயன், 9 விக்கெட்டுகளை 36.88 சராசரியில் கைப்பற்றினார். அவரால் அதிக அளவிலான விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும், இலங்கையில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாதன் லயன் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் முடிந்துவிட்டது... ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!
இலங்கையில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நாதன் லயன் 35 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.