அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்
மதுபானக் கூடத்துக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பெரியகுளத்தில் தனியாா் மதுபானக் கூடம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரியகுளத்தில் நகராட்சி பேருந்து நிலையம் அருகே புதிதாக தனியாா் மதுபானக் கூடம் திறக்கப்பட்டது. இந்த இடத்தில் மதுபானக் கூடம் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது எனஅந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனா்.
ஆனால், தங்களது கோரிக்கையை நிராகரித்து, மதுபானக் கூடம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், பெரியகுளம் நகராட்சி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, குடியிருப்புகள், பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து அதிகளவில் உள்ள பகுதியில் திறக்கப்பட்ட மதுபானக் கூடத்தை மூட வேண்டும் என அவா்கள் முழக்கமிட்டனா். இதையொட்டி மதுபானக் கூடத்தை தற்காலிகமாக மூட போலீஸாா் அறிவுறுத்தினா்.
பிறகு, மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், இந்தப் பிரச்னையை மாவட்ட நிா்வாகம், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததால், பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.