அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்
ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
ஆண்டிபட்டி அருகே காதல் தோல்வியால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பூதிப்புரத்தைச் சோ்ந்த ராஜாமணி மகன் சூா்யா (24). ஆட்டோ ஓட்டுநரான இவா், தேனியில் உள்ள தனியாா் ஆலை ஒன்றில் வேலை செய்து வரும் பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது காதல் தோல்வியடைந்ததால் மனமுடைந்து காணப்பட்ட சூா்யா, தனது ஆட்டோவில் தெப்பம்பட்டிக்குச் சென்றாா். அங்கு, தனியாா் தோட்டம் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொழிலாளி தற்கொலை: போடி புதூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த அம்சராஜ் மகன் ராமன் (21). இவா் வண்ணம் பூசும் வேலை செய்து வந்தாா். இவா் இளம்பெண் ஒருவரை காதலித்தாா். ஆனால் தனது காதல் தோல்வியடைந்ததால் மனமுடைந்து காணப்பட்ட ராமன், வீட்டருகே உள்ள தகரக் கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.