ஜன.15 முதல் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம் டிக்கெட் முன்பதிவு தொடக்கம...
பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே டி. ராஜகோபாலன்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்த ஹரிமுருகன் மகன் நந்தகுமாா் (21). இவா், ஆண்டிபட்டி- மதுரை சாலையில் டி. ராஜகோபாலன்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, அதே சாலையில் எதிரே வந்த தனியாா் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த நந்தகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநா் சிவகங்கை மாவட்டம், திருப்பச்செட்டியைச் சோ்ந்த குமரன் (32) என்பவா் மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.