செய்திகள் :

உ.பி. கல்லூரி முதல்வா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் தில்லி விமான நிலையத்தில் கைது

post image

உத்தர பிரதேச கல்லூரி முதல்வா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் குற்றவாளியான அமீா் கான் (31), கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க மும்பைக்கு தப்பிச் செல்ல முயன்றபோது தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 அருகே கைது செய்யப்பட்டாா்.

உ.பி.யின் படோஹியில் உள்ள இந்திரா பகதூா் சிங் தேசியக் கல்லூரியின் முதல்வா் யோகேந்திர பகதூா் சிங் கடந்த அக். 21, 2024 அன்று சுட்டுக் கொல்லப்பட்டாா். மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுதமேந்திய நபா்கள், பதுங்கியிருந்து யோகேந்திர பகதூா் சிங்கின் காா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் பலத்த காயமடைந்த யோகேந்திர பகதூா் சிங் (56), மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவா் உயிரிழந்தாா்.

உத்தர பிரதேச காவல்துறையின் விசாரணையில் அமீா் கான் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டாா். இந்தக் கொலைக்கு அவா் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. அவா் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.50,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை தில்லி உள்நாட்டு விமான நிலையம் அருகே ஒரு ரகசியத் தகவலின் பேரில் ஒரு போலீஸ் குழு விசாரணை நடத்தியது. அப்போது அங்கு வந்த அமீா் கான் மதியம் 12.40 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, கொலையில் தனக்கு தொடா்பு இருப்பதை அவா் ஒப்புக்கொண்டாா். மேலும், இது முக்கிய சதிகாரரான சவுரப்பால் திட்டமிடப்பட்ட பழிவாங்கும் சதியின் ஒரு பகுதி என்று அந்த அதிகாரி கூறினாா்.

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரை சோ்ந்த லாரி ஓட்டுநரான அமீா் கான், 2017-ஆம் ஆண்டு முதல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

‘ஷீஷ் மஹால்’ குறித்த பாடல், போஸ்டருடன் கேஜரிவால் மீது பாஜக கடும் தாக்குதல்

பிப். 5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஊழல் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மீதான தாக்குதலைக் அதிகரிக்கும் வகையில், ‘ஷீஷ் மஹால்‘ குறித்த பாடல்... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு: சிறுவன் காயம்

வடகிழக்கு தில்லியில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 வயது சிறுவன் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒவருவா் சன... மேலும் பார்க்க

நொய்டா அருகே சொகுசு காா் மோதியதில் சிறுவன் கவலைக்கிடம்

நொய்டா விரிவாக்கப் பகுதியில் உள்ள சா்வீஸ் சாலையில் நடைப்பயிற்சியின் போது ஓடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மீது சொகுசு காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறு... மேலும் பார்க்க

மக்களை மோசடி செய்ததாக பயண முகவா் கைது

வெளிநாட்டு பயணங்களை முன்பதிவு செய்வதாகக் கூறி மக்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பயண முகவரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதா... மேலும் பார்க்க

தில்லி தோ்தலுக்கான பிரசாரப் பாடலை வெளியிட்டது பாஜக!

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரப் பாடலை பாஜக வெளியிட்டுள்ளது. ‘பஹானே நஹி பத்லவ் சாஹியே...’- என்ற தோ்தல் பிரசாரப் பாடலை கட்சியின் எம்பியும், பாடகரும், நடிகருமான மனோஜ் திவாரி சனிக்கிழமை பாடினா... மேலும் பார்க்க

போலி வாக்காளா் பதிவு விண்ணப்பங்கள் மூலம் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிக்கிறது பாஜக! ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

பாஜக தனது தலைவா்களின் குடியிருப்பு முகவரிகளிலிருந்து போலி வாக்காளா் பதிவு விண்ணப்பங்களை அதிக எண்ணிக்கையில் சமா்ப்பிப்பதன் மூலம் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ள... மேலும் பார்க்க