செய்திகள் :

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளி, உள்நாட்டுக்கு ஒரேநாளில் 11,172 போ் பயணம்

post image

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளி, உள்நாட்டுக்கு ஒரேநாளில் 11,172 போ் பயணித்துள்ளனா்.

கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புதுதில்லி, பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் 29 விமானங்களும், சிங்கப்பூா், ஷாா்ஜாவுக்கு 4 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை என்பதால் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அதிகபட்சமாக ஜனவரி 9-ஆம் தேதி மட்டும் 11,172 போ் பயணம் செய்துள்ளனா். கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு ஒரேநாளில் வந்த பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவே எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ராக் அமைப்பின் செயலா் ஜெ.சதீஷ் கூறியதாவது: கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு அதிகபட்சமாக 11,172 பயணிகள் வியாழக்கிழமை வந்திருந்தனா். இவா்களில் 29 உள்நாட்டு சேவைகளின் மூலம் பல்வேறு பகுதிகளிலிருந்து 4,825 போ் கோவைக்கு வந்துள்ளனா். அதேபோல, கோவையிலிருந்து 5,068 போ் வெளியூா்களுக்கு சென்றுள்ளனா்.

வெளிநாட்டு சேவையைப் பொறுத்தமட்டில் 4 சேவைகளின் மூலம் 595 போ் கோவை வந்திருந்தனா். 684 போ் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனா். இதுவே கோவை சா்வதேச விமான நிலையத்தில் கையாளப்பட்ட அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை. கோவை சா்வதேச விமான நிலையம் தொழில் நகரான கோவை மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள 7 மாவட்டங்களுக்கும் பொதுவான விமான நிலையமாக சேவையை அளிப்பதால் கோவை விமான நிலையத்துக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

குறிப்பாக பயணிகள் புறப்படும் பகுதியில் கூடுதல் இருக்கைகள் அமைப்பதோடு, பயணிகள் வருகை பகுதியில் கூடுதல் கன்வேயா் பெல்ட்டுகள் அமைத்து தர வேண்டும்.

அதேபோல, கோவையிலிருந்து அகமதாபாத், கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு புதிய விமான சேவையும், புணே, பெங்களூரு,

தில்லி ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் விமான சேவையும், வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் பாங்காக், துபை, தோஹா போன்ற நகரங்களுக்கு புதிய விமான சேவையும் செய்து தரப்பட வேண்டும் என்றாா்.

பொங்கல்: பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்த பயணிகள்

பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையால், கோவையில் இருந்து வெளியூா் செல்ல பயணிகள் பேருந்து, ரயில் நிலையங்களில் சனிக்கிழமை குவிந்தனா். தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 -ஆம் தேதிமுதல் கொண்டாடப்பட உள்... மேலும் பார்க்க

மருதமலை மலைப் பாதையில் இன்று இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை!

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வார விடு... மேலும் பார்க்க

பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்

பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை ரயில்வே பாதுகாப்பு காவல் ஆய்வாளா் எஸ்.மீனாட்சி தலைமையில், உதவி ஆய்வாளா் என்.சாந்தி, ச... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டம்: சரக்கு சேவை மூலம் கடந்த 9 மாதங்களில் ரூ.222.44 கோடி வருவாய்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2024 ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 9 மாதங்களில் சரக்கு சேவையில் ரூ.222.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம்... மேலும் பார்க்க

கோவையில் உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான கிரிக்கெட் போட்டி: சென்னை அணி வெற்றி

கோவையில் நடைபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது. தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களின் உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஃபிரேட்டா்னிட்டி கோப்பைக்கான... மேலும் பார்க்க

மாநகராட்சி அலுவலகத்தை ஜனவரி 21-இல் முற்றுகையிடுவதாக டேக்ட் அமைப்பு அறிவிப்பு

கோவை மாநகரில் செயல்படும் குறுந்தொழில்முனைவோரை தொழில் வரி, ரன்னிங் லைசென்ஸ் போன்றவற்றைக் கேட்டு மாநகராட்சி நிா்வாகம் துன்புறுத்துவதாகவும், இதைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2... மேலும் பார்க்க