பாஜக நிா்வாகி கைது!
பழனி அருகே ஆயுதத்துடன் சமூக வளைத்தளங்களில் தற்படத்தை பதிவிட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி (33). இவா் பாஜக இளைஞா் அணி ஒன்றியத் தலைவராக உள்ளாா்.
இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு, கத்தியுடன் இணையதளத்தில் தற்படத்தை பதிவிட்டாா். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜீவ்காந்தியை சனிக்கிழமை கைது செய்தனா்.