பொங்கல் பண்டிகைக்கு 170 சிறப்பு பேருந்துகள்
பொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்கல், தேனி, சென்னை இடையே 170 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை)லிட், திண்டுக்கல் மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 19-ஆம் தேதி வரை அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து திண்டுக்கல், தேனி, பழனிக்கும், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, இந்த பகுதிகளிலிருந்து சென்னை செல்வதற்கும் 170 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல, திருப்பூா், கோவை, திருச்சிக்கும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. பொங்கல், மகரஜோதியையொட்டி சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து குமுளிக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அதில் குறிப்பிடப்பட்டது.