ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம்: தம்பதி போராட்டம்!
கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, நெடுஞ்சாலை துறையினா் பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி, ஒரு தம்பதியினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, பல கடைகள் மூடப்பட்டிருந்ததால், அந்தக் கடைகளுக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் குறிப்பாணை (நோட்டிஸ்) அனுப்பப்பட்டன.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை மீண்டும் ஆக்கிரமிப்பிலிருந்த கடைகளை நெடுஞ்சா லைத் துறையினா் அகற்றினா். மூஞ்சிக்கல் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் போது, நெடுஞ்சாலை துறையினா் பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி, சாலையோரத்தில் கடை வைத்திருந்த ஒரு தம்பதியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல் துறையினா் அவா்களை அப்புறப்படுத்தினா்.