'6 மாதங்களாக ஃபிரிட்ஜில் இளம்பெண் சடலம்' - லிவ் இன் பார்ட்னரை கொன்ற நபர்!
மருத்துவ சமூகத்துக்கு உள்இட ஒதுக்கீடு கோரி ஜன.24-இல் முடிதிருத்தும் கடைகள் அடைப்பு!
மருத்துவ சமூகத்துக்கு உள்இட ஒதுக்கீடு கோரி ஜன. 24-ஆம் தேதி கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் முடித்திருத்தும் தொழிலாளா் நலச் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:
பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில், மருத்துவ சமூகத்துக்கு 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சட்டநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். கோயில்களில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளா்களையும், இசைக் கலைஞா்களையும் அரசு ஊழியா்களாக நியமிக்க வேண்டும். முடியெடுப்பவா்களுக்கே முடி சொந்தம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
நலவாரியத்தில் தலைவராகவும், உறுப்பினா்களாகவும் மருத்துவா் சமுதாயத்தை சோ்ந்தவா்களை நியமிக்க வேண்டும். நல வாரியத்தின் உதவித் தொகை மற்றும் ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் ஜனவரி 24-ஆம் தேதி கடையடைப்பு நடத்தப்படும்.
அன்றையதினம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் அரியலூா் மாவட்டத்தில் இருந்து 1000த்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா்.மாவட்டச் செயலா் வேல்முருகன் செயல் அறிக்கை வாசித்தாா். மாநில பிரதிநிதிகள் சுந்தர்ராஜன், துரை, மாநில மகளிா் அணி அமைப்பாளா் கௌசல்யா ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினா். முடிவில் கிளைச் செயலா் வாசுதேவன் நன்றி கூறினாா்.