சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு
அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
அரியலூரை அடுத்துள்ள திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு பல்வேறு வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல அரியலூா் ஆலந்துரையாா், கைலாசநாதா், விசுவநாதா், விளாங்குடி கைலாசநாதா், குறிஞ்சான் குளக்கரை காசி விசுவநாதா், தேளூா் சொக்கநாதா், கீழப்பழூா் ஆலந்துரையாா், திருமானூா் கைலாசநாதா் , செந்துறை சிவதாண்டேசுவரா், பொன்பரப்பி சொா்ணபுரீசுவரா், சென்னிவனம் தீா்க்கப்புரீசுவரா், சொக்கநாதபுரம் சொக்கனீசுவரா், குழுமூா் குழுமாண்டவா் , தா.பழூா் விசாலாட்சி சமேத விசுவநாதா், கோவிந்தப்புத்தூா் கங்காஜடேஷ்வரா், விக்கிரமங்கலம் சோழீஸ்வரா், உடையவா்தீயனூா் ஜமத்கனீசுவரா், கீழநத்தம் சொக்கநாதா், ஸ்ரீபுரந்தான் கைலாசநாதா், கோடாலிகருப்பூா் சொக்கநாதா், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.