'களத்தில் இறங்க தயாராக நிற்கிறான்!' - தன்னுடைய ஜல்லிக்கட்டு காளை வீடியோவை பகிர்ந்துள்ள சூரி
பொங்கல் வந்துவிட்டது...கடந்த சில மாதங்களாக, தயாராகி கொண்டிருக்கும் காளைகள் இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு களத்தில் இறங்க போகின்றன.
இப்படி களத்தில் இறங்கும் காளைகளில் அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் காளைகளும் அடங்கும். அந்த வரிசையில் ஜல்லிக்கட்டு களம் காணப்போகும் தன்னுடைய காளையுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சூரி.
'பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராகி நிற்கிறான் - ராஜாக்கூர் கருப்பன்' என்கிற மாஸ் கேப்ஷனுடன் காளையுடன் தான் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.