செய்திகள் :

`ரயிலை தள்ளும் மேகமே...' காதலியை கரம் பிடித்த பாடகர் அறிவு! - இளையராஜா, திருமா பங்கேற்பு

post image
ராப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் அறிவுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

சமூக நீதிக்காக தனது ராப் பாடல்கள் மூலம் தொடர்ந்துக் குரல் கொடுத்து வருபவர் அறிவு. திரையிசையிலும், தனியிசையிலும் அதிரடியாக கலக்கிக் கொண்டிருக்கும் அறிவு தனது நீண்ட நாள் காதலி கல்பனாவை கரம் பிடித்திருக்கிறார்.

அறிவும் கல்பனாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். கல்பனாவும் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்ந்து ஒடுக்குமுறைக்குகளுக்கு எதிரான தனது கருத்துகளை பல தளங்களில் பதிவு செய்து வருகிறார். `அட்டகத்தி' தினேஷ் நடிப்பில் இயக்குநர் அதியன் அதிரை இயக்கத்தில் உருவாகி வரும் `தண்டகாரண்யம்' திரைப்படத்திலும் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கடந்தாண்டு அறிவு இசையில் 12 பாடல்களைக் கொண்ட `வள்ளியம்மா பேராண்டி' ஆல்பம் வெளியாகியிருந்தது. அந்த ஆல்பத்திலுள்ள `தொடாத' என்ற பாடலின் மியூசிக் வீடியோவையும் இயக்கியது கல்பனாதான்.

Arivu & Kalpana

இவர்கள் இருவருக்கு இன்று சென்னையிலுள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று இந்த தம்பதியை வாழ்த்தியிருக்கிறார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் ஆகியோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.

வாழ்த்துகள் அறிவு மற்றும் கல்பனா!

VIKATAN PLAY

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

MadhaGajaRaja: ``லேட்டாக வந்தாலும் இந்த பொங்கலோட ஹீரோ இந்த MGRதான்!'' - வசனகர்த்தா வெங்கட் ராகவன்

விஷால் நடிப்பில் உருவாகியிருக்கிற `மதகஜராஜா' திரைப்படம் பொங்கல் ரிலீஸாக நாளை வெளியாகிறது.2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு இத்திரைப்படத்தை வெளியிட இத்திரைப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டார... மேலும் பார்க்க

AK: `I Love them unconditionally’ - ரசிகர்கள் குறித்து அஜித்... அவரே கொடுத்த `விடாமுயற்சி' Update

நடிகர் அஜித் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் வரை கார் பந்தயத்தில் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறியிருக்கிறார். பந்தய வீரராக மட்டுமல்லாமல் அஜித் குமார் ரேசிங் அணியின் உரிம... மேலும் பார்க்க

மெட்ராஸ்காரன் விமர்சனம்: தமிழில் ஷேன் நிகாம்; ஒன்லைன் ஓகே, இருந்தும் படம் சிக்கலில் தவிப்பது ஏன்?

சென்னையில் வசிக்கும் சத்தியமூர்த்தி (ஷேன் நிகாம்), தன் காதலி மீராவை (நிஹாரிகா) திருமணம் செய்ய, தன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வருகிறார். திருமணத்துக்கு முந்தைய நாள் காரில் பயணம் செய்யும்போது ஏற்படும்... மேலும் பார்க்க

AR Rahman: `க்ளாசிகல் தான் நிலைத்திருக்கும், அதனால்...' - அனிருத்துக்கு ரஹ்மான் கொடுத்த அட்வைஸ்!

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என புகழப்படும் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர் அனிருத்துக்கு சில அட்வைஸ்களை வழங்கியுள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித... மேலும் பார்க்க