செய்திகள் :

AK: `I Love them unconditionally’ - ரசிகர்கள் குறித்து அஜித்... அவரே கொடுத்த `விடாமுயற்சி' Update

post image

நடிகர் அஜித் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் வரை கார் பந்தயத்தில் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறியிருக்கிறார்.

பந்தய வீரராக மட்டுமல்லாமல் அஜித் குமார் ரேசிங் அணியின் உரிமையாளராகவும் இருப்பதால், கார் பந்தய சீசன் முடியும் வரை அதில் முழுமையாக கவனம் செலுத்த இருக்கிறார்.

இந்தநிலையில் அஜித் சினிமாவிலிருந்து சற்று விலகி இருப்பதால் இந்த ஆண்டு திரைத்துறையில் அவருக்கு சைலண்ட் ஆண்டாக இருக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அஜித், "எனக்கு இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாகின்றன. நான் இரண்டு ப்ராஜக்ட்களை முடித்திருக்கிறேன், அவை வெளியாக தயாராக இருக்கின்றன.

ஒன்று ஜனவரியில் வெளியாகிறது. மற்றொன்று ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும். இதனால் நான் என்னுடைய பந்தைய கரியரில் கவனம் செலுத்த முடியும்." என்றார்.

பின்னர் தொகுப்பாளரிடம் "நீங்கள் அவர்களைப் பார்த்தீத்களா..." எனக் கேட்டு, ரசிகர்களை நோக்கி கை காட்டி"நான் அவர்களை வரைமுறையற்று அன்பு செய்கிறேன்" என்பதை ஆங்கிலத்தில், "I Love them un conditionally" என்றார்.

'நீங்கள் இங்கு இருக்கும் மற்றும் யூடியூபில் இதைப் பார்க்கும் உங்கள் ரசிகர்களுக்கு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா...' எனத் தொகுப்பாளர் கேட்டதற்கு, "கண்டிப்பாக... நான் பின்னர், அதைச் சரியான முறையில் செய்வேன்" என்றார் அஜித்.

ஜனவரி 10ம் தேதி வெளியாக இருந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜனவரியில் தனது திரைப்படம் ஒன்று வெளியாவதாக கூறியிருக்கிறார் அஜித்.

இதனால் ஏற்கெனவே இணையதளத்தில் பேசப்பட்டு வருவதுபோல, 'ஜனவரி 20ம் தேதிக்கு மேல் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகுமா' என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கேட்கத் தொடங்கியிருக்கின்றனர்.

MadhaGajaRaja: ``லேட்டாக வந்தாலும் இந்த பொங்கலோட ஹீரோ இந்த MGRதான்!'' - வசனகர்த்தா வெங்கட் ராகவன்

விஷால் நடிப்பில் உருவாகியிருக்கிற `மதகஜராஜா' திரைப்படம் பொங்கல் ரிலீஸாக நாளை வெளியாகிறது.2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு இத்திரைப்படத்தை வெளியிட இத்திரைப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டார... மேலும் பார்க்க

`ரயிலை தள்ளும் மேகமே...' காதலியை கரம் பிடித்த பாடகர் அறிவு! - இளையராஜா, திருமா பங்கேற்பு

ராப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் அறிவுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.சமூக நீதிக்காக தனது ராப் பாடல்கள் மூலம் தொடர்ந்துக் குரல் கொடுத்து வருபவர் அறிவு. திரையிசையிலும், தனியிசையிலும் ... மேலும் பார்க்க

மெட்ராஸ்காரன் விமர்சனம்: தமிழில் ஷேன் நிகாம்; ஒன்லைன் ஓகே, இருந்தும் படம் சிக்கலில் தவிப்பது ஏன்?

சென்னையில் வசிக்கும் சத்தியமூர்த்தி (ஷேன் நிகாம்), தன் காதலி மீராவை (நிஹாரிகா) திருமணம் செய்ய, தன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வருகிறார். திருமணத்துக்கு முந்தைய நாள் காரில் பயணம் செய்யும்போது ஏற்படும்... மேலும் பார்க்க

AR Rahman: `க்ளாசிகல் தான் நிலைத்திருக்கும், அதனால்...' - அனிருத்துக்கு ரஹ்மான் கொடுத்த அட்வைஸ்!

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என புகழப்படும் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர் அனிருத்துக்கு சில அட்வைஸ்களை வழங்கியுள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித... மேலும் பார்க்க