ஒருநாள் போட்டிகளில் ஆஸி.யை வீழ்த்துவது மிகவும் கடினம்: இங்கிலாந்து கேப்டன்
பெர்லின் திரைப்பட விழாவில் பாரசைட் இயக்குநரின் புதிய படம்!
ஆஸ்கர் வென்ற பாரசைட் இயக்குநரின் புதிய படமான மிக்கி 17படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பெர்லின் திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரியாவின் முன்னணி இயக்குநரான போங் ஜூன்- ஹோ பாரசைட் திரைப்படத்தை இயக்கியிருந்தார். 2019இல் வெளியான இந்தப் படத்தை கொரிய சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
கொரிய மொழியில் எடுக்கப்பட்ட சா்வதேச அளவில் கவனம் ஈா்த்த ‘பாரசைட்’ திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த சா்வதேச திரைப்படம் (அயல்மொழி), சிறந்த இயக்குநா், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை 92ஆவது ஆஸ்கா் விழாவில் வென்றது.
தற்போது இவரது புதிய படமான ‘மிக்கி 17’ 2025 பெர்லின் திரைப்பட விழாவில் பிப்.28ஆம் தேதி திரையிட தேர்வாகியுள்ளது.
இந்தப் படத்தை உலகம் முழுவதும் மார்ச்.7ஆம் தேதி ஹாலிவுட் ஸ்டூடியோ வார்னர் புரோஸ் வெளியிடுகிறது.
ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 118 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. எட்வர்டு அஸ்டன் நாவலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள படங்கள் குறித்து ஜன.21ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும்.
பிப்.13 - பிப்.23ஆம் தேதி இந்த பெர்லின் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.