எல்லா கடை கடிகாரத்திலும் 10:10 என நேரம் காட்டுவது ஏன்? | My Vikatan
‘இதை நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது..’: ஏ. ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசைத்துறை குறித்து பேசியுள்ளார்.
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இந்தாண்டு முக்கியமான திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. அதிலொன்று, நடிகர் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், ரஹ்மான் நேர்காணலில் பங்கேற்று பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: இதிலும் வெற்றி கிடைக்கட்டும்... அஜித்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
அதில், “கலையில் புதுமையான விஷயங்களைக் கொண்டு வர வேண்டும். அதில் தோல்வி கிடைத்தாலும் பரவாயில்லை. நான் சம்பாதிக்க துவங்கியதும் இசைக்கருவிகளை வாங்க திட்டமிட்டபோது மாத, மாதம் வாடகை வரும் என அடுக்குமாடி குடியிருப்பை வாங்கச் சொன்னார்கள். நம்முடைய மிடில்கிளாஸ் மனநிலை இதுதான். வாழ்க்கையில் வெறும் பயணிகளாக நாம் இருக்கக்கூடாது. உலகை முன்னேற்றும் ஓட்டுநராக இருக்க வேண்டும்.
வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டு நம்மூர் வந்தால் வணிக வளாகத்திற்கு வெளியே கேபிள் வயர்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய கலைஞர்கள் இயற்கையுடன் இணைந்திருப்பவர்கள். நம்முடைய கட்டமைப்புகளைப் பார்த்தால் ஊக்கம் வருமா? இருக்கிற இயற்கையை நாம் அழித்துவிட்டோம். எங்கு சென்றாலும் அசிங்கமாக இருக்கிறது. அடுத்த தலைமுறையினர் அடித்தளத்திலிருந்து சரி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.