செய்திகள் :

Ajith Kumar Racing: `கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவில்லையா?’ - டீம் வெளியிட்ட திடீர் அறிக்கை

post image

Ajith Kumar Racing

துபாயில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்கவிருந்த நடிகர் அஜித் குமார், கார் ஓட்டுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் குமார் கார் ரேசிங் அணியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கடந்த இரண்டு நாட்களாக அஜித் குமார் ரேசிங் அணியின் முக்கிய கமிட்டி சமீபத்தில், 24H துபாய் பந்தயத்துக்கு தயாராகி வந்த அஜித் குமாருக்கு ஏற்பட்ட விபத்தின் தாக்கங்களை ஆராய்ந்து வந்தது.

இந்த 24H போட்டி அதிக திறனைக் கோருகிறது, அணியினர் இந்த சீசனில் வரவிருக்கும் சவால்களை சந்திப்பது குறித்து ஆலோசித்தோம். அணியின் உரிமையாளர் மற்றும் மைய பகுதியான அஜித் குமாரின் உடல்நலமும் மற்றும் அணியின் ஒட்டுமொத்த வெற்றியும் முன்னுரிமைகளாக இருக்கின்றன." எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அணியினரின் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு அஜித் தன்னலம் பாராமல், 'அஜித் குமார் ரேசிங்' அணி சார்பாக வரவிருக்கும் ஒரு போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளது.

தனித்துவமான ஒரு முடிவை அஜித் எடுத்துள்ளார் என்கிறது அறிக்கை. "அஜித் குமார் இந்த நிகழ்வில் இரண்டு ரோல்களை மேற்கொள்ளவுள்ளார். போர்ஷ்சே 992 கப் கார் பந்தயத்தில் அணி உரிமையாளராகவும், போர்ஷ்சே கேமேன் ஜிடி4 பந்தயத்தில் ஓட்டுநராகவும் பங்கேற்கவுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜித் குமாரின் இந்த முடிவை 24H துபாய் ரேஸிங் சீரீஸ் நிர்வாகமும் ஏற்றுள்ளது.

Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் பேச்சு

சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கல்லூரி மாணவர்களிடையே பேசுகையில், 'இந்தி நம்முடைய தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்!' எனப் பேசியிருக்கிறார்.Ashwi... மேலும் பார்க்க

''கிரிக்கெட் போட்டியை புறக்கணியுங்கள்; எங்களுடன் நில்லுங்கள்'' - வேண்டுகோள் வைத்த பெண் ஒலிம்பியன்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியை புறக்கணிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுத்த ஆப்கானிஸ்தான் பெண் ஒலிம்பியன் ஃப்ரிபா ரெசாயி. யார் இந்த ஃப்ரிபா ரெசாயி? இவர் ஏன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர... மேலும் பார்க்க

Two Tier Test System : 'ஐ.சி.சி முன் வைக்கும் புதிய முறை' - வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்!

டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் வகையிலும் வருவாயைப் பெருக்கும் வகையிலும் 'Two Tier Test System' என்ற முறையை ஐ.சி.சி அமல்படுத்தும் யோசனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.உலக ... மேலும் பார்க்க

Kohli : 'கோலியின் 'Fear of Failure' மனநிலைதான் பிரச்னை' - கமெண்டேட்டர் நானி எக்ஸ்க்ளூஸிவ்

நானி, தமிழ் கிரிக்கெட் வர்ணனையின் மிக முக்கிய குரல். நீண்டகாலமாக கிரிக்கெட் சார்ந்தே இயங்கிக் கொண்டிருப்பவர். பார்டர் கவாஸ்கர் டிராபி முடிந்திருக்கும் சூழலில் பல்வேறு கேள்விகளுடன் அவரை பேட்டிக்காக தொட... மேலும் பார்க்க

Champions Trophy : சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா ஆடுவாரா? - அணியை எப்போது அறிவிக்கும் பிசிசிஐ?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான உத்தேச அணியை ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி கெடு விதித்... மேலும் பார்க்க