Vishal: "இப்ப எந்த நடுக்கமும் இல்ல.. MIC கரெக்ட்-ஆ தான் இருக்கு பாருங்க"- உடல்நிலை குறித்து விஷால்
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மதகஜராஜா' திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரம் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட விஷாலின் தோற்றம் பலரையும் அதிர்ச்சியாக்கியது. மேடையில் பேசும்போது மைக் பிடிக்க முடியாமல் நடுக்கத்துடன் காணப்பட்டார் விஷால். பிறகு, அவரை படக்குழுவினரோடு மேடையில் தொகுப்பாளார் டி. டி அமர வைத்தார். அவருக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாகவும் தொகுப்பாளர் தெரிவித்தார். சமூக வலைதளப் பக்கங்களில் விஷாலின் உடல்நிலை குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டு வந்தன.
இந்நிலையில் நேற்று மதகஜராஜா திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது. அந்த காட்சிக்கு நடிகர் விஷாலும் வந்திருந்தார். அப்போது உடல்நிலை குறித்து பேசிய விஷால், " அன்று எனக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக தான் என் கை நடுங்கியது. என் அப்பா அம்மா கூட இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு போகவேண்டாம் என சொன்னார்கள்.
ஆனால் நான் சுந்தர் சி என்பவருக்காகவும் இப்படத்திற்காகவும் தான் வந்தேன். இதையடுத்து நீங்கள் எனக்கு காட்டிய அன்பை பார்த்து கண்கலங்கி போனேன். என்றென்றும் நீங்கள் காட்டிய அன்பை நான் மறக்கவே மாட்டேன். எங்க அப்பாவின் தன்னபிக்கைதான் என் பலம்.
'இப்ப எந்த நடுக்கமும் இல்ல.. MIC கரெக்ட்-ஆ தான் இருக்கு பாருங்க'. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்." எனப் பேசியிருக்கிறார்.