தடை செய்யப்பட்ட யாபா மாத்திரைகள் பறிமுதல்! 2 பேர் கைது!
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் தடை செய்யப்பட்ட யாபா மாத்திரைகளை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டத்தில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின அடிப்படையில் பட்டாலா பகுதியில் இன்று (ஜன.12) காலை சோதனை மேற்கொண்டனர். அப்போது, மேகாலயா மாவட்டத்தில் இருந்து வந்த சிமெண்டு லாரி ஒன்றியில் சோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு லட்சம் யாபா மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த லாரி ஓட்டுநர் ஜமால் ஹுசைன் (வயது 44) மற்றும் அவரது உதவியாளர் மிண்டு பர்மன் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரின் மீதும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்!
இந்நிலையில், அவர்கள் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளதோ அவர்கள் அனைவரையும் கைது செய்யவுள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.
முன்னதாக, அவர்கள் கடத்தி வந்த யாபா எனும் போதை மாத்திரைகளின் மதிப்பு சுமார் ரூ. 1கோடி எனவும் மெத்தபெட்டமைன் மற்றும் கேபைன் ஆகிய போதைப் பொருள்களின் கலவையால் உருவாக்கப்படும் அதனை இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.