செய்திகள் :

'ஸ்டாலினின் இந்த ஆணவம் நல்லதல்ல...' - தேசிய கீத விவகாரத்தில் ஆளுநர் மாளிகை காட்டம்

post image
முதல்வர் ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்திருக்கிறது.

2025 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின்போது பேரவைக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இசைக்கப்படாததால் சிறிது நேரத்திலேயே அவையிலிருந்து வேகவேகமாக வெளியேறினார். அந்த சம்பவம் அப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், "அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ‘தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?’ என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது முதல்வரின் இந்த பதிவுக்கு, ஆளுநர் மாளிகை இன்று (ஜனவரி 12) பதிலளித்துள்ளது. ஆளுநர் மாளிகையின் பதிவில், " ஸ்டாலின் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணக்கிறோம்...!' - அண்ணாமலை அறிவிப்பு

அதிமுக, தேமுதிக-வைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.- =ஏ 121காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்ப... மேலும் பார்க்க

ஈரோடு: `நாமம்' போட்டு காங்கிரஸார் எதிர்ப்பு; வைரலாகும் திமுக நிர்வாகியின் பதிவு - வெடிக்கும் சர்ச்சை

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல்... மேலும் பார்க்க

Trump: டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர்! - இந்தியா - அமெரிக்கா உறவு வலுக்குமா?!

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிரம்ப் வரும் 20-ம் தேதி 47-வது அமெரிக்க அதிபராக பொற... மேலும் பார்க்க

பெரியார் விவகாரம் : `ஆதாரம் இருக்கு... ஆனா இல்ல’ - சீமான் சர்ச்சை பேச்சுக்கு நா.த.க சொல்வதென்ன?

பெரியார் குறித்த கருத்துபெரியார் குறித்து, `விமர்சனம்’ என்கிற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என கொதிக்கிறது திராவிட அமைப்புகள். அதேசமயம்... மேலும் பார்க்க

'பெரியார் என்ன சமூகநீதி செய்தார்... பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது'- சீமான்

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.சீமானின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.... மேலும் பார்க்க

Trump : குற்றம் நிரூபிக்கப்பட்ட டிரம்ப்... எந்தெந்த நாடுகளுக்குச் செல்ல முடியாது?!

சில நாடுகளின் சட்டப்படி, குற்றவியல் தண்டனைப் பெற்றவர்கள் அந்த நாடுகளுக்குள் வர முடியாது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் 'ஹஸ் மனி (Hush Money)' வழக்கில் குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்டுள்ளா... மேலும் பார்க்க