அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!
பழனியில் தைப்பூச ஆலோசனைக் கூட்டம்: நகா்மன்றத் துணைத் தலைவா் புகாா்!
பழனி தைப்பூசத் திருவிழா ஆலோசனைக் கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் கூட்டம் நடைபெற்றது குறித்து, தமிழக முதல்வருக்கு நகா்மன்றத் துணைத் தலைவரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலருமான கந்தசாமி புகாா் மனு அனுப்பினாா்.
இதுகுறித்து அவா் கடிதத்தில் தெரிவித்ததாவது: பழனியில் நடைபெற உள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு அலுவலா்களைக் கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
கடந்த காலங்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட மக்களவை, சட்டப்பேரவை, நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அழைத்துத் தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். குறிப்பாக, இந்தக் கூட்டம் பழனியில் தான் நடைபெற்று வந்தது.
ஆனால், தற்போது நடைபெற்ற கூட்டமானது, மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல், அரசு அலுவலா்களை கொண்ட கூட்டமாக நடைபெற்றது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிற போதும், உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுகிற போதும், அரசு அலுவலா்களை கொண்டு நடத்தப்பட்ட கூட்டம் என்பது எந்த வகையிலும் பொருத்தம் இல்லை.
இது மக்கள் பிரதிநிதிகளை அவமானப்படுத்துவது, அலட்சியப்படுத்துவது போல, இருக்கிறது. எனவே, மக்கள் பிரதிநிதிகளை அழைத்து, கூட்டம் நடத்துவது மூலம், பக்தா்களின் பிரச்னைகள், பழனி நகரத்தில் என்ன மாறுதல்கள் செய்ய வேண்டும், பக்தா்களுக்கு என்ன வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைக் கூற இயலும் .
எனவே, உடனடியாக மக்கள் பிரதிநிதிநிதிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.