செய்திகள் :

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!

post image

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், குடியிருந்த 250 பேரும் வெளியேற்றப்பட்டனர்.

மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து, குடியிருப்பில் இருந்த சுமார் 250 பேரும் பாதுகாப்பாக கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து ஒரு மணிநேரத்தில் தீயை அணைத்தனர்.

பின்னர், குடியிருப்பாளர்கள் தங்கள் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

பாஜக ஆட்சி வந்தால் குடிசைப்பகுதிகளை அழித்து விடுவர்: கேஜரிவால்

தில்லியில் பாஜக ஆட்சி வந்தால், குடிசைப்பகுதி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி விடுவர் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.தில்லியில் ஷாகுர் பஸ்தி பகுதியில் செய்தியா... மேலும் பார்க்க

வேலை செய்யும் நேரத்தைவிட பணியின் தரமே முக்கியம்! -ஆனந்த் மஹிந்திரா

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பணியாளர் நலன் சார்ந்த கருத்துகளை சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.கடந்த சில நாள்களுக்கு முன், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என். ஆர்.... மேலும் பார்க்க

விவேகானந்தரின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர் மோடி

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிற... மேலும் பார்க்க

இழிவாகப் பேசியதாக சமூக ஆர்வலர் மீது நடிகை ஹனி ரோஸ் வழக்குப்பதிவு!

நடிகை ஹனி ரோஸ் குறித்து இழிவான கருத்துகளை சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் கூறியதாக, அவர் மீது ஹனி ரோஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.இதுகுறித்து, சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் மீது எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத... மேலும் பார்க்க

நண்பர் வீட்டு விருந்துக்கு சென்றவர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் நண்பர் வீட்டுக்கு சென்றவர் ஏழாவது தளத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவில் சட்டம் பயின்று வந்த காசியாபாத... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் சோன்மாா்க் சுரங்கப்பாதை: பிரதமா் நாளை திறந்து வைக்கிறாா்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா்-காா்கில் தேசிய நெடுஞ்சாலையில் சோன்மாா்க் சுரங்கப்பாதையை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜன. 13) திறந்து வைக்கிறாா். கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயர... மேலும் பார்க்க