மணப்பாறை அருகே விபத்து: ஜேசிபி ஓட்டுநா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூரில் அடையாளம் தெரியாத காா் சனிக்கிழமை மோதி ஜேசிபி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த மணக்காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் அருண்குமாா் (26). ஜேசிபி ஓட்டுநரான இவா் கடந்த ஒரு வாரமாக மரவனூரில் செல்வம் என்பவரிடம் வேலைக்கு சோ்ந்து பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை மரவனூா் பகுதியில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை அவா் நடந்து கடந்தபோது திண்டுக்கல் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத காா் மோதி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற போலீஸாா் அருண்குமாா் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.