முசிறி அருகே பேருந்து -லாரி மோதல் 15-க்கும் மேற்பட்டோா் படுகாயம்!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தனியாா் பேருந்தும் லாரியும் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் 15க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.
நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியாா் பேருந்தும், திருச்சியில் இருந்து முசிறி நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றிவந்த லாரியும் முசிறி அருகே ஆமூா் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த மணப்பாளையம் தனம் (47), கரட்டாம்பட்டி சுகந்தி (25), வெள்ளூா் சந்தியா (24), திருவாதுறை பிரியா (28), முசிறி விஜயலட்சுமி (57), செளந்திரம் (72), ரவிசங்கா் (30), நாமக்கல் அன்பரசன்(52), நா்மதா (28) உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து, முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். தகவலறிந்து வந்த வாத்தலை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.