சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
பள்ளி வேன் விபத்து பொதுமக்கள் சாலை மறியல்!
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அருகே சனிக்கிழமை பள்ளி வாகனம் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதால், அப்பகுதி மக்கள் சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரி மறியலில் ஈடுபட்டனா்.
நமணசமுத்திரத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில் பேரையூா் விலக்கு பகுதியில் சனிக்கிழமை காலை பள்ளி வேன் ஒன்று முன்பக்க டயா் வெடித்ததில் நிலைகுலைந்தது. உடனே ஓட்டுநா் சாதுா்யமாக சாலையோரத்தில் வேனை நிறுத்தினாா். அந்த வேனில் பள்ளிக் குழந்தைகள் சுமாா் 20 போ் இருந்துள்ளனா்.
குறிப்பிட்ட இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்துவந்தனா். இந்நிலையில் விபத்து நேரிட்டவுடன் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். நமணசமுத்திரம் போலீஸாா் வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.