'6 மாதங்களாக ஃபிரிட்ஜில் இளம்பெண் சடலம்' - லிவ் இன் பார்ட்னரை கொன்ற நபர்!
இரவு நேரத்தில் சாலை விரிவாக்கப் பணி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
பொதுமக்களின் சிரமத்தைக் கவனத்தில் கொண்டு புதுக்கோட்டை மாநகரில் சாலை விரிவாக்கப் பணிகளை இரவு நேரத்தில் மேற்கொள்ள வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநகரக் குழுக் கூட்டத்துக்கு கணேஷ் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், புதுக்கோட்டையிலிருந்து மேட்டுப்பட்டி, கேப்பறை வழியாக அறந்தாங்கி செல்லும் நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணிகள் பகலில் நடைபெறுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். மக்கள் புழக்கம் குறைவாக இருக்கும் இரவு நேரத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட உசிலங்குளம் பகுதியில் பல மாதங்களாக இயங்காமல் இருக்கும் சிறுமின் விசை ஆழ்துளை குழாயை சீரமைத்து குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கோரி போராடி வரும் காமராஜபுரம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஜி. நாகராஜன், சு.மதியழகன், மாநகரச் செயலா் புதுகை எஸ். பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.