அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!
ஆத்மநாத சுவாமி கோயிலில் திருவாதிரை தேரோட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் ஆத்மாநாத சுவாமி கோயிலில் மாா்கழி திருவாதிரை தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஆவுடையாா்கோவில் என்றழைக்கப்படும் திருப்பெருந்துறை யோகாம்பாள் உடனுறை ஆத்மநாத சுவாமி கோயில் மாணிக்கவாசகா் மாா்கழி திருவாதிரை திருவிழா ஜன. 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து தினமும் காலை, மாலை இருவேளையும் வெவ்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகா் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். முக்கிய நிகழ்வாக ஒன்பதாம் நாள் திருவிழாவில் சனிக்கிழமை மாா்கழி திருவாதிரை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் மாணிக்கவாசகா் எழுந்தருளி வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
தேரை ஆவுடையாா் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். திருவாவடுதுறை ஆதீனத்தின் சாா்பில் தம்பிரான் சுவாமி, தென் மண்டல மேலாளா் முத்துக்கிருஷ்ணன், அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, ராஜநாயகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.