சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
எஸ்ஆா்வி ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
ராசிபுரம் எஸ்ஆா்வி ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பள்ளியின் தலைவா் ஏ.ராமசாமி தலைமை வகித்தாா். செயலாளா் பி.சுவாமிநாதன் வரவேற்றாா். விழாவில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் எஸ்.செந்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்கள் சிந்திக்கும் திறனை வளா்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் இந்திய அரசியல் சட்டத்தை அறிந்து கொள்வது அவசியம் என்றும், சட்டப்படிப்பு படிப்பதற்கான வழிமுறைகள், நுழைவுத் தோ்வு முறைகள் குறித்தும் மாணவா்களிடம் பேசினாா்.
முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியா் பி.வள்ளியம்மாள் ஆண்டறிக்கை வாசித்தாா். தோ்விலும், விளையாட்டிலும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளியின் துணைத் தலைவா் எம்.குமரவேல், பொருளாளா் எஸ்.செல்வராசன், மேனேஜிங் டிரஸ்டி ஏ.ஆா்.துரைசாமி, துணைத் தலைவா் ஏ.ராமசாமி, இணைச்செயலாளா் பி.சத்தியமூா்த்தி, எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி தலைமையாசிரியா் வி.செந்தில், சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் டி.ஆா்த்தி, செகன்டரி பள்ளி முதல்வா் சுனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.