Vishal: "இப்ப எந்த நடுக்கமும் இல்ல.. MIC கரெக்ட்-ஆ தான் இருக்கு பாருங்க"- உடல்நி...
பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பொங்கல் விழா
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீதிமன்ற பணியாளா்கள், வழக்குரைஞா்களிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனை தொடா்ந்து நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு பொங்கல் திருநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பரமத்தி சாா்பு நீதிமன்ற நீதிபதி நளினாகுமாா், உரிமையியல் நீதிபதி கலைச்செல்வி, நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.