பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலை: முதல்வர் ஸ்டாலின்
கவனம் ஈர்க்கும் வீர தீர சூரன்-2 பட பாடல்!
‘வீர தீர சூரன்-2’ படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் ‘வீர தீர சூரன்-2’ படம் உருவாகியுள்ளது.
இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டால் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ‘கலகல’வென வந்தாரா? மத கஜ ராஜா - திரை விமர்சனம்!
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘கல்லூரும்’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.
இப்பாடலுக்கான வரிகளை விவேக் எழுதியுள்ளார். பாடலை ஹரி சரண், ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர்.