செய்திகள் :

`கேம் சேஞ்சர்' டிக்கெட் உயர்வைத் திரும்பப் பெற்றது தெலங்கானா அரசு!

post image

கேம் சேஞ்சர் படத்தின் டிக்கெட் உயர்வுக்கு அளித்த உத்தரவை தெலங்கானா அரசு திரும்பப் பெற்றது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, நடிகை கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் முதல் நேரடி தெலுங்குப் படமாக இந்தப் படம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) வெளியானது.

கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தெலங்கானாவில் ஜனவரி 10 ஆம் தேதி மட்டும் 6 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டது. முதல்நாளில் மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 150 வசூலிக்கவும், ஒற்றை திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 100 வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

தொடர்ந்து, ஜனவரி 11 முதல் 19 வரையிலான 9 நாள்களில் (5 காட்சிகள்) மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 100 கட்டணமும், ஒற்றைத் திரையரங்குகளில் ரூ. 50 கூடுதல் கட்டணமும் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

மேலும், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சைபர் குற்றங்களின் தாக்கம் குறித்த விளம்பரங்கள் திரையிடப்பட வேண்டும் என்று தெலங்கானா அரசு கூறியிருந்தது.

இதனையடுத்து, திரையரங்குகளில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிக்கெட் விலை உயர்வைக் கண்டித்து, தெலங்கானா அரசை காங்கிரஸார் விமர்சித்தனர். இந்த நிலையில், திரையரங்குகளுக்கு கூடுதல் கட்டணம் குறித்த அளிக்கப்பட்ட உத்தரவை தெலங்கானா அரசு ரத்து செய்தது.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொது நலன், சுகாதாரம், பாதுகாப்பு முதலானவற்றை கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் அதிகாலை காட்சிகள் அனுமதிக்கப்படாது என்றும் தெலங்கானா அரசு கூறியது.

குடும்பஸ்தன் வெளியீட்டுத் தேதி!

நடிகர் மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் ப... மேலும் பார்க்க

பிசிசிஐ புதிய செயலாளர் யார்?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்... மேலும் பார்க்க

காலில் காயம்! ரஷ்மிகாவால் படப்பிடிப்புகள் பாதிப்பு!

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்ப... மேலும் பார்க்க

எனக்கு ஒன்றும் இல்லை... நன்றாக இருக்கிறேன்: விஷால்

நடிகர் விஷால் தன் உடல்நிலை குறித்து பேசியுள்ளார்.இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி... மேலும் பார்க்க

பிரபல ஓடிடியில் ஜல்லிக்கட்டு நேரலை!

பொங்கல் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பிரபல ஓடிடி நேரலையில் ஒளிபரப்புகிறது.இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் பகுதியாக தமிழ்நாட்டின் அடையாளமாக் கருதப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, மக்களுக்கு நேரலையில் காட்சிப்ப... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 அறிவிப்பு தயார்!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. சன் பிக... மேலும் பார்க்க