செய்திகள் :

பிக் பாஸ் 8: இந்த வாரம் எதிர்பாராத 2 பேர் வெளியேற்றம்!

post image

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 14வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மஞ்சரி, ராணவ் ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தனர். போட்டியை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களான சாச்சனா, ரவீந்திரன், வர்ஷினி உள்ளிட்டோரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வாரம் அருண் பிரசாத், தீபக் ஆகிய இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: ‘கலகல’வென வந்தாரா? மத கஜ ராஜா - திரை விமர்சனம்!

நடிகர் தீபக், அருண் பிரசாத் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு நுழையும் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ரயான் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் வெற்றிப் பெறுபவருக்கு பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற பட்டமும் ரூ. 50 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு சேவை மையம்!

இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவை மையம் அமைக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அறிவித்துள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்... மேலும் பார்க்க

பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார்: சீமான்

திராவிடம் பேசிய பெரியார் ஆரியத் தலைமையோடு நட்புடன் இருந்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங... மேலும் பார்க்க

பெண்ணைக் கொலை செய்து கொலையாளி தற்கொலை!

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள தங்கும் விடுதியில் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, கொலையாளி தற்கொலை செய்துக் கொண்டார்.அம்மாவட்டத்தின் விளப்பில்சாலா எனும் பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 53) மற்று... மேலும் பார்க்க

ஓடிடியில் மிஸ் யூ!

ஓடிடியில் வெளியானது மிஸ் யூ திரைப்படம்.சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.தொடர்ந்து, மிஸ் யூ திரைப்ப... மேலும் பார்க்க

அதிகாரிகளைத் தாக்கிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவி கைது!

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் சோதனை நடத்திய அதிகாரிகளைத் தாக்கிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவி மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்! பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ம... மேலும் பார்க்க