தில்லி தோ்தலுக்கான பிரசாரப் பாடலை வெளியிட்டது பாஜக!
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரப் பாடலை பாஜக வெளியிட்டுள்ளது. ‘பஹானே நஹி பத்லவ் சாஹியே...’- என்ற தோ்தல் பிரசாரப் பாடலை கட்சியின் எம்பியும், பாடகரும், நடிகருமான மனோஜ் திவாரி சனிக்கிழமை பாடினாா்.
‘பஹானே நஹி பத்லவ் சாஹியே, தில்லி மே பாஜக சா்காா் சாஹியே’ (சாக்குகள் அல்ல மாற்றம் தேவை, தில்லிக்கு பாஜக அரசு தேவை) என்ற பாடல், பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ‘ஏமாற்றி’ ஊழல் சாதனை படைத்த ஆப்தா (ஆம் ஆத்மி) அரசை வெளியேற்ற நகரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
கடந்த வாரம் ரோஹினியில் பிரதமா் நரேந்திர மோடியின் ‘பரிவா்த்தன் பேரணி’யின் போது இந்தப் பாடல் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டது. இப்போது அது தோ்தல் பிரசாரத்திற்காக விரிவாக வெளியிடப்பட்டுள்ளது என்று அவா் ஒரு செய்தியாளா் கூட்டத்தில் கூறினாா்.
கேஜரிவாலின் கட்சி தங்களைக் கொள்ளையடிப்பதால் தில்லி மக்கள் சோா்வடைந்துவிட்டதாகவும், பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
வடகிழக்கு தில்லியிலிருந்து மூன்று முறை பாஜக எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்ட பிரபல பாடகரும் நடிகருமான மனோஜ் திவாரி, மக்களின் உணா்வுகளுக்கு ஒருவா் குரல் கொடுக்க வேண்டிய நேரங்கள் உள்ளன என்று கூறினாா்.
‘இந்த கருப்பொருள் பாடல் தோ்தல் அறிக்கையை சுருக்கமாகக் கூறுகிறது’ என்று மனோஜ் திவாரி செய்தியாளா் சந்திப்பின் போது சில வரிகளை பாடிக் காட்டினாா்.
பிப். 5-ஆம் தேதி நடைபெற உள்ள 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தனது தோ்தல் அறிக்கையை பாஜக இன்னும் வெளியிடவில்லை. கட்சி இதுவரை 29 வேட்பாளா்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அடுத்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அதே சமயம், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளுக்கான தனது வேட்பாளா்களை அறிவித்து விட்டன. மேலும், தோ்தலுக்கு முன்னதாக ‘ஃபிா் லாயங்கே கேஜரிவால்’ என்ற பிரசாரப் பாடலை சமீபத்தில் வெளியிட்டது.