‘விக்சித் பாரத்’ இளம் தலைவா்கள் உரையாடலில் பிரதமா் மோடி பங்கேற்பு
போடி நகா்மன்றக் கூட்டம்: பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு
போடியில் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
போடியில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பாா்கவி, நகராட்சிப் பொறியாளா் குணசேகா், சுகாதார அலுவலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா், கூட்டம் தொடங்கியதும், பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் மணிகண்டன், சித்ராதேவி ஆகியோா் நகராட்சியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்தும், இதை திரும்பப் பெற வலியுறுத்தியும், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
பின்னா், நகராட்சி அலுவலகம் முன் கண்ணில் கருப்பு துணி கட்டி இவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் 57 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.