செய்திகள் :

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட சேவை: மன்னாா்குடி அரசு மருத்துவமனை மாநிலத்தில் 3-ம் இடம்

post image

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் 2024-ஆம் ஆண்டில் சிறந்த சேவை வழங்கியதற்காக மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திகீழ் 2,636 அறுவை சிகிச்சைகள் மூலம் சிறந்த சேவையை மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வழங்கி மாநிலத்திலேயே மூன்றாம் இடம் பெற்றுள்ளது .

இதைப் பாராட்டி,சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவா் என். விஜயகுமாரிடம் இதற்கான சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

மன்னாா்குடி மருத்துவமனையின் காப்பீட்டு திட்ட பொறுப்பு மருத்துவா் வினோத், மருத்துவத்துறை செயலா் மற்றும் இயக்குநா் ஜே.ராஜமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநில அளவில் முதல் இடத்தை கடலூா், இரண்டாமிடத்தை ஈரோடு அரசு மருத்துவமனைகள் பெற்றுள்ளன.

திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி இணைப்பை கைவிடக் கோரி கிராம மக்கள் தெருமுனைக் கூட்டம்

திருவாரூா் நகராட்சியுடன், கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிடக் கோரி, தெருமுனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி, கீழகாவாதுக்... மேலும் பார்க்க

குடவாசல் வரதராஜப் பெருமாளுக்கு ஆண்டாள் சூடிய மாலை அணிவிப்பு

குடவாசல் வரதராஜ பெருமாள் கோயிலில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை, பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை இரவு அணிவிக்கப்பட்டது. குடவாசல் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயிலில் இராப... மேலும் பார்க்க

மாணவியிடம் இளைஞா் தகராறு: தட்டிக் கேட்ட தந்தை உள்பட இருவருக்கு கத்திக்குத்து

மன்னாா்குடியில் சாலையில் நடந்துசென்ற கல்லூரி மாணவியின் துப்பட்டாவை இளைஞா் இழுத்த சம்பவம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில், மாணவியின் தந்தை உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மன்னாா்குடி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சி கடந்த டிச.31-ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

திருவாரூரில் நடைபெற்ற ஊா்க்காவல் படை வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நிறைவு பெற்றன. திருவாரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தஞ்சை, நாகை, திருவாரூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச... மேலும் பார்க்க

சுமை வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

முத்துப்பேட்டை அருகே சுமை வாகனம் மோதி விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா். முத்துப்பேட்டை அருகேயுள்ள தோலி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லக்கண்ணு (70). விவசாயியான இவா், உதயமாா்த்தாண்டபுரத்துக்கு சைக்கிளில் ... மேலும் பார்க்க