செய்திகள் :

ஐஎம்டியின் 150-ஆவது ஆண்டுவிழா: வங்கதேசம் புறக்கணிப்பு

post image

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) 150-ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என வங்கதேச வானிலை ஆய்வு மையம் (பிஎம்டி) தெரிவித்துள்ளது.

அரசு செலவில் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிா்க்கும் நோக்கில் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என பிஎம்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாணவா்கள் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடியை தொடா்ந்து வங்கதேச பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளாா். அவரை ஒப்படைக்குமாறு முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு, இந்தியாவிடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில் ஐஎம்டி நிகழச்சியை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் புறக்கணித்துள்ளது.

இதுகுறித்து வங்கதேச செய்தியாளா்களிடம் பிஎம்டி செயல் தலைவா் மொமினுல் இஸ்லாம் கூறியதாவது: ஐஎம்டியின் 150-ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க அந்த அமைப்பு சாா்பில் ஒரு மாதம் முன்பே எங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அவா்களுடன் நல்லுறவை தொடா்கிறோம். ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம்.

கடந்தாண்டு டிசம்பா் மாதத்தில் ஐஎம்டி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன். இருப்பினும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களுக்கு அரசு ஒதுக்கும் நிதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிா்க்கிறோம் என்றாா்.

கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள எல்லையொட்டிய அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மியான்மா், பூடான், நேபாளம், இலங்கை மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஐஎம்டி அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடா்பாக ஐஎம்டியின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஐஎம்டி தொடங்கப்பட்ட காலத்தில் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால் வங்கதேசம் எந்த பதிலும் கூறவில்லை.

கடந்த 1864, 1866, 1871 ஆகிய ஆண்டுகளில் கொல்காத்தாவில் பருவமழை மற்றும் புயலால் பெருஞ்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, 1875-ஆம் ஆண்டு கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு ஐஎம்டி தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1905-இல் சிம்லா, 1928-இல் புணேவுக்கு தலைமையகம் மாற்றப்பட்டது. இறுதியாக 1944-இல் தில்லிக்கு மாற்றப்பட்ட தலைமையகம் தற்போது வரை அங்கு செயல்பட்டு வருகிறது.

ஜனவரி 15, 2025-இல் ஐஎம்டி 150 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நடை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடக்கவிருக்கிறாா்.இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியி... மேலும் பார்க்க

ஜப்பான் - பல்கலை.யில் சுத்தியல் தாக்குதல்: மாணவி கைது

ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் சுத்தியலால் சரமாரியாக தாக்குதல் நடத்திய தென் கொரிய மாணவி கைது செய்யப்பட்டாா். 22 வயதான அவா் இலக்கில்லாமல் சுத்தியலைச் சுழற்றி நடத்திய தாக்குதலில் அவரின் ... மேலும் பார்க்க

புலம்பெயரும் மில்லியனர்கள் அதிகரிப்பு! ஏன்?

பல்வேறு நாடுகளுக்கு குடிபெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தாண்டும் கணிசமாக உயரும் என்று பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.உயர் வரிவிதிப்புக் கொள்கைகள், பொருளாதார அச்சுறுத்தல்கள... மேலும் பார்க்க

மகப்பேறு சிகிச்சையில் பெண் பலி! மது அருந்த சென்ற மருத்துவர் இழப்பீடு வழங்க உத்தரவு!

மலேசியாவில் மகப்பேறு சிகிச்சையில் இருந்த பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்களை இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.மலேசியாவில் 2019 ஆம் ஆண்டில் மகப்பேறுக்காக புனிதா மோகன் (36) எ... மேலும் பார்க்க

பயணிகள் ரயில் மீது லாரி மோதி விபத்து! 9 பேர் பலி!

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் மீது சரக்கு லாரி மோதியதில் 9 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சிந்து நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற சரக்கு லாரி ஒன்று, பயணிகள் ரயில் மீ... மேலும் பார்க்க

காட்டுத் தீக்கு இரையாகிவிரும் கனவு நகரம் லாஸ் ஏஞ்சலீஸ்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் தீக்கிரையாகி சாம்பலாக மாறிவருகிறது.தெற்கு கலிஃபோர்னியாவில் பற்றிய தீ ம... மேலும் பார்க்க