காட்டுத் தீக்கு இரையாகிவிரும் கனவு நகரம் லாஸ் ஏஞ்சலீஸ்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் தீக்கிரையாகி சாம்பலாக மாறிவருகிறது.
தெற்கு கலிஃபோர்னியாவில் பற்றிய தீ மேலும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தை காவு வாங்கிக்கொண்டு, மேலும் தனது ஜூவாலையால் காட்டுப் பகுதிகளையும் குடியிருப்புகளையும் சம்பலாக்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது.
இது தொடர்பான டிரோன் காட்சிகள், ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாகியிருப்பதைக் காட்டுகிறது. தற்போது காட்டுத் தீ பரவி வரும் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.