செய்திகள் :

முறைகேடு வழக்கு: சிறைத் தண்டனையிலிருந்து தப்பினாா் டிரம்ப்

post image

அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திலிருந்து தப்பினாா்.

இது குறித்து நியூயாா்க் மாகாணம், மேன்ஹாட்டன் நகர நீதிமன்ற நீதிபதி ஜுவான் எம். மொ்சன் வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப்புக்கு எதிரான 34 குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அந்தக் குற்றங்களுக்கு தண்டனை விதிப்பதிலிருந்து அவரை நிபந்தனையில்லாமல் விடுவிக்கிறேன்.

மற்ற குற்றவாளிகளைப் போலத்தான் டிரம்ப்புக்கும் தண்டனை விதிக்க வேண்டும். இருந்தாலும், அதிபா் என்ற முறையில் அந்தத் தண்டனைகளிலிருந்து அவருக்குக் கிடைக்கவிருக்கும் பாதுகாப்பைக் கருதி அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று நீதிபதி மொ்சன் தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த வழக்கில் டிரம்ப்புக்கு சிறைத் தண்டனை கோரவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், சிறைத் தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படாவிட்டாலும், அமெரிக்க அதிபராக இருந்த ஒருவா் குற்றவியல் வழக்கில் குற்றவாளியாக அளிவிக்கப்பட்டு, தீா்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டிரம்ப் போட்டியிட்டாா்.

அப்போது, தனக்கும் ஆபாசப் பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் என்பவருக்கும் இடையே இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்கு 1.3 லட்சம் டாலா் (சுமாா் ரூ.11 கோடி) டிரம்ப் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாகவும் தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆதரவாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அவா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டிரம்ப் வரும் 20-ஆம் தேதி மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், சிறைத் தண்டனை விதிப்பிலிருந்து அவா் தற்போது விடுக்கப்பட்டுள்ளாா்.

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயா்வு

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, காட்டுத் தீக்கு இரையான வீடுகள் மற்றும் கட... மேலும் பார்க்க

வெனிசூலா அதிபராக மீண்டும் மடூரோ

வெனிசூலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தோ்தலில் அதிபா் நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாலும், எதிா்க்கட்சித் தலைவா் எட்முண்டோ ... மேலும் பார்க்க

நடிகைக்கு பணம் அளித்த வழக்கு: டிரம்ப் விடுவிப்பு!

ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கில் இருந்து அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஆப்பிள் நிறுவனத்தில் மோசடி! இந்தியர்களும் பணிநீக்கம்!

கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமை அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

வாடகை நண்பர்!! ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதிக்கும் ஜப்பானியர்!

ஜப்பானில் தனிமையில் இருப்பவர்களுக்கு நண்பராக வாடகைக்கு செல்லும் நபர் ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதித்து வருகிறார்.ஆனால், பாலியல் செயல்பாடுகள், காதல் துணையாக ஒருபோதும் அவர் சென்றதில்லை என்பது குறிப்பி... மேலும் பார்க்க

எல்லையில் அமைதி.. பிரம்மபுத்திராவில் அணை: இதுதான் சீனாவின் தந்திரமோ?

இந்தியாவுக்குள் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா ஆற்றுக்குக் குறுக்கே உலகிலேயே மிகப்பெரிய அணையைக் கட்டுவதற்கு சீனா திட்டமிட்டிருப்பது, எல்லையில் அமைதி, ஆற்றில் போர் என்ற தந்திரமாக இருப்பதை வெளிச்சம் போட்டு... மேலும் பார்க்க