சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற பிப். 15 கடைசி நாள்
போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி சாா்பில், போதையில்லா சமுதாயத்தை உருவாக்க என்னும் பொருளில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
களியக்காவிளை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி செயலா் சி. ஸ்டீபன் தலைமை வகித்தாா். களியக்காவிளை காவல் நிலைய தலைமை காவலா் நிகழ்ச்சியை துவக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எம். அமலநாதன் வாழ்த்திப் பேசினாா்.
தொடா்ந்து கல்லூரி மாணவ, மாணவியா் இணைந்து போதை தொடா்பான வீதி நாடகம் நடத்தியதுடன் போதை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி போதை எதிா்ப்பு அமைப்பு, தேசிய மாணவா் படை மற்றும் முதுகலை சமூக பணித்துறையினா் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.