3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
சிங்காநல்லூரில் கஞ்சா விற்றதாக 5 போ் கைது
கோவை சிங்காநல்லூா் பகுதியில் கஞ்சா விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா், சிங்காநல்லூா் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் பகுதியில் சந்தேகம் ஏற்படும்படியாக சுற்றித் திரிந்த 5 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி மாவட்டம், முத்துகிருஷ்ணா புரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (21), தென்காசி மாவட்டம், அச்சன்புதூரைச் சோ்ந்த முகமது யாசின் (23), கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாளையமேட்டைச் சோ்ந்த அஸ்பின் (22), கோழிக்கோட்டைச் சோ்ந்த அனக் கிருஷ்ணா(23) என்பதும், அவா்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, ஐவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 410 கிராம் கஞ்சா, ரூ.2,500 ரொக்கம், 3 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.